இந்தியா, மார்ச் 26 -- Manoj Bharathiraja: தமிழ் சினிமாவின் மரியாதைக்குரிய இயக்குநராக பார்க்கப்படுபவர் இயக்குநர் பாரதிராஜா. இவரது மகன்தான் மனோஜ் பாரதிராஜா (48). இவர் தாஜ்மஹால் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.

பின், நடிகர், இயக்குநர் என தன்னை அடையாளப்படுத்த வந்த மனோஜ், சினிமாவில் அப்பாவின் அளவுக்கு சோபிக்க முடியவில்லை. இருப்பினும், தனக்குள் இருக்கும் இயக்குநரின் தாகம் தீராத மனோஜ் ஷங்கர், மணிரத்னம் போன்றோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

அந்த சமயத்தில் தான் ஏற்கனவே நடிகராக தன்னை நிரூபித்திருந்த மனோஜ், ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தில், ரஜினிக்கு டூப்பாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இவர் அந்தப் படம் முழுவதும் ரஜினியுடனான காட்சிகளில் சிட்டி ரோபாவாக நடித்திருப்பார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் சமயத்தில் எடுத்த புகைப்படங்கள் எல்லாம் இப்ப...