இந்தியா, மார்ச் 26 -- Manoj Bharathiraja: இயக்குநரும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா நேற்று மார்ச் 25 ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திரையுலக பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மனோஜ் பாரதிராஜாவின் உடல் இன்று மாலை 3 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின், பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அவரது உடலை தகனம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மனோஜின் உடலுக்கு நேரில் வந்து மாலையிட்டு அஞ்சலி செலுத்தினார். நடிகர் விஜய், நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து நட...