இந்தியா, மார்ச் 26 -- Manoj Bharathiraja: நடிகரும் இயக்குநருமான மனோஜின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தும் விதமாக நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையா நீலாங்கரையில் உள்ள வீட்டிர்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனோஜின் இறப்பிற்கான காரணம் குறித்து பேசினார்.

80 வயதை தாண்டிய பிறகு நிம்மதி இழந்து இருப்பது என்பது கொடுமையான செயல், எப்படி இறைவனுக்கு இப்படி எல்லாம் மனசு வருதுன்னே தெரியல. ஆன்மீகத்துல நாட்டமா இருக்கவங்களுக்கு கூட ஆண்டவன் மேல கோபம் வருது. அவர பாக்கவே முடியல.

எவ்ளோ பெரிய கலை வித்தகர். அவர் எதுவும் பேச வேண்டும். அவர பத்தி பல நூறு வருஷம் நாம எல்லாம் பாரதிராஜா பாரதிராஜான்னு பேசலாம். ஒரு மாபெரும் மனிதனுக்கு பிள்ளையா பிறந்தது மட்டும் தான் மனோஜூக்கு வந்த ஸ்ட்ரெஸிற்கான காரணம்ன்னு நான் நினைக்குறேன்.

தம்பி மனோஜுக்கு 48 வயசு. ...