இந்தியா, பிப்ரவரி 27 -- Lucky Bhaskar: துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படம் திரையரங்குகளில் மட்டுமல்லாமல், நெட்ஃபிக்ஸிலும் அதிரடியாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 31 அன்று தீபாவளி பண்டிகையின் போது வெளியான இந்தப் படம், ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. அதன்பின்னர் ஓடிடியிலும் சாதனை படைத்து, தொடர்ச்சியாக 13 வாரங்களாக டிரெண்டிங்கில் இருக்கும் முதல் தென்னிந்திய திரைப்படமாக இருக்கிறது.

துல்கர் சல்மான் மற்றும் மீனாட்சி சௌத்ரி நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் 31 அன்று திரையரங்குகளில் வெளியாகி, நவம்பர் 28 ஆம் தேதி முதல் நெட்ஃபிக்ஸில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது. அன்றிலிருந்து ஓடிடியில் இந்தப் படத்தின் வெற்றி தொடர்கிறது.

ஒரு நடுத்தர வர்க்க பின்னணி கொண்டவர்கள் குடும்பத்திற்காக ரிஸ்க் எடுத்தால் என்ன ஆகும்...