இந்தியா, மார்ச் 22 -- L2 Empuraan Movie Update:நடிகர்-இயக்குனர் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் L2 எம்புராண் படத்தின் முன்பதிவு நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கியது. புக் மை ஷோவில், முன்பதிவு தொடங்கப்பட்ட முதல் மணி நேரத்தில் 96,140 டிக்கெட்டுகள் விற்பனையாகி, ஜவான், கல்கி 2898 ஏடி, லியோ போன்ற படங்களை விட அதிக அளவில் விற்பனையாகியுள்ளது. அத்துடன் முதல் 5 நாட்களுக்கான டிக்கெட்டுகள் முற்றிலும் விற்பனை ஆனதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மேலும் படிக்க: எம்புராண் படத்தில் இணைந்த கேம் ஆஃப் த்ரோன் பிரபலம்.. விவரங்கள் உள்ளே!

பிரித்விராஜ், ஒரு மணி நேரத்தில் 96,140 டிக்கெட்டுகள் விற்பனையானதை கொண்டாடும் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். மார்ச் 21 அன்று காலை 9 மணிக்கு முன்பதிவு தொடங்கியது, காலை 10:30 மணிக்குள், ஒரு மணி நேரத்திற்கு 96,0...