இந்தியா, மார்ச் 10 -- Kudumbasthan OTT Hit: ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடிப்பில் வெளியான திரைப்படம் குடும்பஸ்தன். இந்தப் படம் கடந்த வாரம் ஓடிடியில் வெளியான நிலையில் தற்போது இந்தப் படம் ஓடிடியில் அசத்தி வருகிறது. இந்த காமெடி டிராமா படத்திற்கு அதிக வியூஸ் கிடைத்துள்ளதாக ஜீ5 ஓடிடி தளம் அதன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படம் குடும்பஸ்தன். குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், கடந்த மார்ச் 7 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் மணிகண்டனின் இந்தப் படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் ஓடிடியிலும் இந்த வெற்றி தொடர்கிறது.

மேலும் படி...