இந்தியா, பிப்ரவரி 13 -- Kayal Serial: விக்னேஷ் அனுப்பியதாக கூறி கயல் வீட்டிற்கு வந்த பிரியாணி பார்சலை காமாட்சி வாங்கி வந்து தேவியிடம் தருகிறாள். தன் மருமகன் மனசு மாறி தேவி மீது அன்பாக மாறி வருவதாக எண்ணி இதனை தேவியிடம் கொடுத்தார். தேவி அதை சாப்பிட சென்ற போது, போன் வரவே அது விக்னேஷாக இருக்கும் என்ற ஆசையில் பிரியாணியை சாப்பிடாமல் வைத்துவிட்டு போன் எடுக்க செல்கிறார்.

அந்த சமயம் அங்கு வந்த ஷாலினி, விக்னேஷ் பெயரில் அவரது மாமா அனுப்பிய பிரியாணியை சாப்பிட்டு விட்டாள். இதனால், அவள் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்தாள். இதைப் பார்த்த கயல் குடும்பத்தினர் உடனடியாக ஆம்புலன்சுக்கு போன் செய்து ஷாலினியை மருத்துவமனையில் சேர்த்தனர். பின், கயலின் தங்கை ஷாலினி மயங்கி விழுந்து விட்டதாகவும் மருத்துவமனையில் இருப்பதாகவும் அன்புவிடம் கூறினாள்.

இதைக் கேட்டு பதற்...