இந்தியா, பிப்ரவரி 11 -- Kayal Serial: சொன்னபடி தன் தங்கை தேவியின் வளைகாப்பை நடத்த வேண்டும் என்ற குறிக்கோளோடு கயல் எல்லா வேலையையும் பார்த்து வருகிறார். அதே சமயத்தில் கயல் பக்கத்தில் இருந்தே அவருக்கு எதிரான அத்தனை சதித் திட்டங்களையும் போட்டு வருகிறார் அவரது பெரியம்மா வடிவு.

தேவியின் வளைகாப்பிற்கு வளையல் வாங்க வேண்டி இருந்ததால், தன் பெரியப்பா பெரியம்மா, அண்ணன், அண்ணி எழிலுடன் நகைக் கடைக்கு செல்கிரறார் கயல். அங்கு சாதாரணமாக பேசுவது போல, கயலின் வறுமையையும் ஏழ்மையையும் குத்திக்காட்டி பேசுகிறரா் வடிவு.

அதேசமயம், தேவியின் வளைகாப்பிற்கு விக்னேஷ் நிச்சயம் வருவார் என கயல் கூறியதால் அப்செட் ஆன வடிவு, நேராக வேதவள்ளிக்கு போன் செய்து அவரின் ஈகோவை தூண்டி விடுகிறார். அத்துடன் நில்லாமல் விக்னேஷ் மீது கயல் வைத்துள்ள நம்பிக்கை பற்றியும் சொல்லி வேதவள்ளியை க...