இந்தியா, ஜனவரி 30 -- Kayal Serial: தேவியின் வளைகாப்பு சந்தோஷமாக நடக்க வேண்டும் என்பதற்காக கயல் தன் சுயமரியாதை, இத்தனை நாள் கடைபிடித்து வந்த அப்பாவின் வார்த்தைகள் என அனைத்தையும் மீறி சில செயல்களில் தன்னை வற்புறுத்தி ஈடுபடுத்தினார். ஆனால், அவை எல்லாவற்றிற்கும் பலன் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் கயலிற்கும் அவரது குடும்பத்திற்கும் நடக்கப் போவது என்ன என்பதை எதிர்பார்த்து குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.

அன்பு- ஷாலினி திருமணத்தால் நின்று போன வளைகாப்பு நிகழ்ச்சியை மீண்டும் குடும்பத்தின் ஆதரவோடும், வேதவள்ளியின் ஆசிர்வாதத்தோடும் நடத்த வேண்டும் என்பதற்காகவும், தேவியை விக்னேஷ் மீண்டும் மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் கயல் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார். விக்னேஷ் சற்று மனம் இறங்கி வந்தாலும் வேதவள்ளியின் தீர்க்கம...