இந்தியா, ஜனவரி 29 -- Kayal Serial: தேவியின் வளைகாப்பை சிறப்பாக எந்த குறையும் இல்லாமல், யார் மனதையும் கஷ்டப்படுத்தாமல் செய்ய வேண்டும் என கயல் தவித்து வருகிறார்.

ஆனால், அதே சமயம், அதனைக் கெடுக்கவும் அன்பு - ஷாலினி வாழ்க்கையை சீர்குழைக்கவும், கயலை பொது வெளியில் அசிங்கப்படுத்தவும் அவரது குடும்பத்தினரே திட்டம் தீட்டி வருகின்றனர்.

கயல் திருமணத்தின் போது, தன் பெரியப்பா தன் மீது கொண்டிருக்கும் கோவத்தை அறிந்த கயல், அத்தனை பேர் முன்பும் நிறுத்தி காலில் விழுந்து மன்னிப்பு கோரி இருப்பார். இந்த சம்பவத்திற்கு பின் மனம் திருந்திய அவரது பெரியப்பா கயலை தன் சொந்த பெண் போல் பார்த்துக் கொண்டதுடன், அவருக்கு துணையாக அனைத்து இடங்களிலும் நின்று வருகிறார்.

ஆனால், ஆரம்பத்தில் திருந்திய மாதிரி காட்டிக்கொண்ட வடிவால் ரெம்ப நாள் அதை தாக்குப் பிடிக்க முடியவில்லை. தன...