இந்தியா, டிசம்பர் 8 -- தமிழ் மாதங்கள் அனைத்துமே இறைவனின் மாதமாகக் கருதப்படுகிறது. அதில் கூடுதல் சிறப்பாக இருக்கும் மாதங்களில் கார்த்திகை மாதமும் ஒன்று. புனித மாதமான இந்த கார்த்திகை மாதத்தில் பல விசேஷங்களும், பல வழிபாடு முறைகளும் பின்பற்றப்படுகின்றன.

இந்த கார்த்திகை மாத வழிபாடுகள் மூலம் பல பலன்கள் கிடைப்பதாக ஆன்மீகம் கூறுகிறது. இந்நிலையில் இம்மாதத்தில் செய்யும் வழிபாடுகள் மூலம் கிடைக்கும் பலன்கள் குறித்து இங்கே காண்போம்.

கார்த்திகை மாத வழிபாடு பலன்கள்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மகா தீபத் திருவிழா ஆண்டிற்கு ஒரு முறை கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மகா தீபத்தைக் கண்டால் நமது வாழ்வில் பிரகாசம் பொங்கும் என்பது ஐதீகமாகும்.

இந்த மாதத்தில் புண்ணிய நதியாகக் கருதப்படும் காவிரி நதியில் நீராடுவது, வெண்கல பாத்திர...