இந்தியா, பிப்ரவரி 23 -- Kamal Haasan: நடிகர் கமல் ஹாசன் மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ள தக் லைஃப் படத்திற்கும் நாயகன் படத்திற்கும் ஒரு ஒற்றுமை உள்ளதாக தான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

சென்னையில் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) நடத்திய ஒரு நிகழ்வில் நடிகர் கமல்ஹாசனும் நடிகை த்ரிஷா கிருஷ்ணனும் கலந்து கொண்டனர். அப்போது, அவர்கள் இருவரும் இணைந்து நடித்து ரிலீஸிற்கு காத்திருக்கும் 'தக் லைஃப்' படம் பற்றி கேட்கப்பட்டது.

அப்போது, கமல் படம் பற்றி அதிகம் கருகத்துகளை வெளியிடாமல் கவனமாக இருந்தார், ஆனால் இயக்குனர் மணிரத்னத்துடன் தான் நடித்த கடைசி படமான 'நாயகன்' படத்துடன் இந்தப் படத்திற்கும் ஒற்றுமை இருப்பதாகக் கூறினார் என்று டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது.

தக் லைஃப் படத்தின் டீசர் வெளியானபோது, 1987 ஆம் ஆண்ட...