இந்தியா, பிப்ரவரி 11 -- Kadhalika Neramillai OTT: கிருத்திகா உதயநிதி இயக்கிய காதலிக்க நேரமில்லை திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி வெளியானது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி தயாரித்து ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த இந்தப் படத்தில் ரவி மோகன் (ஜெயம் ரவி), நித்யா மேனன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு, எனை இழு இழு இழுக்குதடி எனும் பாடல் வெளியான சமயத்தில் இருந்தே அதிகரிக்கத் தொடங்கியது.

மாடர்ன் டே காதலை வெளிப்படுத்தும் இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும், இந்தப் படம் இளைஞர்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது எனக் கூறலாம். அதனால், தியேட்டரில் படத்தை பார்க்கத் தவறியவர்கள் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என காத்திருந்தனர்.

இந்நிலையில், காதலிக்க நேரமில்ல...