இந்தியா, பிப்ரவரி 14 -- JEE Mains 2025 அமர்வு 1 தேர்வு ஜனவரி 22, 23, 24, 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. தேர்வு இரண்டு அமர்வுகளில் நடத்தப்பட்டது. முதல் அமர்வு காலை 9 மணி முதல் 12 மணி வரை மற்றும் இரண்டாவது அமர்வு பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்தது. இதையடுத்து இந்த தேர்வின் முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன.

இதில் நாராயணா கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

பானி பிரதா மஜீ என்பவர் 300/300 என 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்றார். இது அவரது அர்ப்பணிப்புக்கும் நாராயணாவின் கடுமையான கல்வி அணுகுமுறைக்கும் குறிப்பிடத்தக்க சான்றாக அமைந்துள்ளது. அவருடன், ஆயுஷ் சிங்கால், குஷாக்ரா குப்தா, விஷத் ஜெயின் மற்றும் ஷிவன் விகாஸ் தோஷ்னிவால் ஆகியோரும் மதிப்...