இந்தியா, ஜனவரி 29 -- Jani Master: நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் வழக்கு தற்போது மீண்டும் டோலிவுட்டில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜானி மாஸ்டரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாகவும், இது ஒரு சிறந்த தீர்ப்பு என்றும் நடிகையும் தொகுப்பாளினியுமான ஜான்சி தன் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

ஜான்சியின் இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து இதற்கு ஜானி மாஸ்டரும் பதிலடி கொடுத்துள்ளார். அதில், தங்களின் சொந்த லாபத்திற்காக சிலர் நீதிமன்ற உத்தரவுகளை மாற்றி தவறான பிரச்சாரம் செய்கிறார்கள் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக பாலியல் தொல்லை குற்றச்சாட்டில் ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டார். நீண்ட நாட்கள் சிறையில் இருந்த அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அந்த வழக்கில் ஜானி மாஸ்டர் தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக செய்திகள...