இந்தியா, ஜனவரி 26 -- Jananayagan: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததால், தனது 69வது படத்திற்கு பின் சினிமாவில் எந்தப் படத்திலும் நடிக்க மாட்டேன் என்றும் முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் கூறினார்.

இதனால், விஜய் நடிக்கும் கடைசி படம் நிச்சயம் மக்களுக்கு மிக நெருக்கமானதாக இருக்கும் என்று பலரும் நினைத்தனர். அதனால், பட பூஜையிலிருந்தே படத்தின் சின்ன சின்ன அப்டேட்டையும் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

இந்நிலையில், ஜனவரி 26 குடியரசு தின நாளான இன்று, விஜய்யின் 69வது படத்திற்கு ஜனநாயகன் என பெயரிட்டிருப்பதாக படக்குழு அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியானதற்கு அடுத்த சில நொடிகளிவேயே ஜநநாயகன் படம் பற்றிய தகவல்களையும் வீடியோக்களையும், படக்குழுவினரின் கருத்துகளையும் தங்களின் யூகங்களையும் ரசிகர்கள் வெளிப்படுத்தி வந்த வண்ணமாக இருக்கின்றனர்.

அந்த வகையில், ஜன...