இந்தியா, ஜூன் 2 -- 1971ம் ஆண்டு முதல் ஜூன் 2ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக பாலியல் தொழிலாளர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதற்கு முந்தைய ஆண்டு இதே நாள் பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் நூற்றுக்கணக்கான பாலியல் தொழிலாளர்கள் ஆவேசமாக புகுந்தார்கள்.

தங்களின் கொடுமையான அவல வாழ்க்கைக்கு தீர்வு காண வேண்டும் எனும் கோரிக்கை உள்ளிட்ட பல வாழ்வியல் உரிமைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்தினார்கள். எட்டு நாட்களுக்கு பின் அந்த தேவாலயத்தில் நுழைந்த பிரான்ஸ் நாட்டு காவல்துறை அவர்களை அப்புறப்படுத்தியது.

ஆனாலும் பாலியல் தொழிலாளர்களுக்கான சில உரிமைகள் அளிக்கப்பட்டன. அந்த வெற்றியை கொண்டாடும் விதத்தில் தான் இந்த நாளில் பாலியல் தொழிலாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

சாதாரண பெண்களுக்கே இங்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் பாலியல் தொழிலாளர்களின் ந...