இந்தியா, மார்ச் 8 -- Ilaiyaraaja Symphoney: இசைஞானி மாஸ்ட்ரோ இளையராஜா இன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசைக் கச்சேரியை அரங்கேற்றம் செய்கிறார்.

லண்டனின் அப்பல்லோ அரங்கத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி வேலியண்ட் எனும் பெயரில் உலகின் சிறந்த இசைக் குழுவினரின் இசையுடன் நடக்கிறது.

தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா தனது முதல் சிம்பொனி இசையை உருவாக்கி அதனை இன்று அரங்கேற்றம் செய்கிறார். இதன் மூலம் அவர் பீத்தோவன், மொசார்ட் வரிசையில் உலகின் சிறந்த இசையமைப்பாளர்களின் பட்டியலில் இடம் பெருவார்.

சிம்பொனி இசை என்பது இசையமைப்பாளர் இளையராஜாவின் நீண்ட நாள் கனவாகவே இருந்தது. அந்தக் கனவு இன்று நிறைவேற உள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜாவ...