இந்தியா, மார்ச் 9 -- Ilaiyaraaja Symphoney: தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா தனது முதல் சிம்பொனி இசையை உருவாக்கி அதனை நேற்று லண்டனில் அரங்கேற்றம் செய்துள்ளார்.

லண்டனின் அப்பல்லோ அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி வேலியண்ட் எனும் பெயரில் உலகின் சிறந்த இசைக் குழுவினருடன் இணைந்து நடைபெற்றது.

மேலும் படிக்க: இளையராஜாவால் இந்தியாவிற்கே பெருமை.. புகழாரம் செய்த ரஜினிகாந்த் மற்றும் பிரபலங்கள்..

இந்திய நேரப்படி, நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு நிகழ்ச்சி அரங்கேறியது. இந்த நிகழ்ச்சிக்காக இளையராஜா தனது முதல் சிம்பொனியை 35 நாட்கலில் எழுதி முடித்துள்ளார். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக அரங்கேறியதன் மூலம் சிம்பொனி இசையை அரங்கேற்றிய முதல் இந்தியர் எனும் பெருமையை பெற்றுள்ளார் இசைஞானி இளையராஜா.

இந்நிகழ்ச்சியில், இளையராஜ...