இந்தியா, பிப்ரவரி 13 -- Ilaiayaraaja: தாங்கள் உரிமைப் பெற்ற பாடல்களை யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடுவதைத் தடுக்கக் கோரி கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மியூசிக் மாஸ்டர் எனும் இசை நிறுவனம் தொடர்ந்த வழக்கில் எதிர் மனுதாரராக இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ள நிறுவனமும் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார். அங்கு இளையராஜா சாட்சியம் அளித்து பின் தன் காரில் புறப்பட்டு சென்றார்.

முன்னதாக, மியூசிக் மாஸ்டர் நிறுவனம் அளித்த புகாரில் தேவர் மகன், குணா உள்ளிட்ட 109 படங்களில் உள்ள பாடல்களுக்கான உரிமத்தை இளையராவின் மனைவி பெயரிலுள்ள நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்ததாகவும், ஆனால், அந்த பாடல்கள் எல்லாம் தற...