இந்தியா, ஜனவரி 27 -- Idly Kadai Release: நடிகர் தனுஷ் தற்போது தான் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தின் வேலைகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், அந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போக உள்ளது என வலைப்பேச்சு யூடியூப் சேனல் குழுவினர் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து அவர்களது யூடியூப் சேனலில் விவாதித்த அவர்கள், தனுஷின் இட்லி கடை படத்தின் ரிலீஸே தள்ளிப் போகும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.

இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியை ஏப்ரல் 10 என பல நாட்களுக்கு முன்னே படக்குழு முடிவு செய்து அறிவித்தது. ஆனால், அதே சமயத்தில் ஆதிக் ரவிச்சந்தர் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படமும் ரிலீஸ் ஆவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்பு, இட்லி கடை படத்திற்கு சிக்கலாக அமைந்தது. படத்தை டிஸ்டிபியூட்டர்ஸ் எல்லாம் பெரிய தொகை கொடுத்து வாங்க முன்வரவி...