இந்தியா, ஜனவரி 29 -- Guru Zodiac Signs: நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். குரு ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் குரு பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார். அதற்கு முன்பு வருகின்ற பிப்ரவரி 4-ம் தேதி அன்று குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடைகின்றார்.

குரு பகவானின் வக்கிர நிவர்த்தியானது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத...