இந்தியா, மார்ச் 22 -- Good Bad Ugly Song Update: நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் முதல் சிங்கிளை படக்குழுவினர் கடந்த 18 ஆம் தேதி வெளியிட்டனர். இந்த சிங்கிள் ஹை வோல்டேஜ் எலிவேஷன் ட்ராக்காக இருக்கும். அது மாஸான கூறுகளும் கொண்ட ஒரு நபரைப் பற்றிய ஒரிஜினல் சம்பவமாக இருக்கும் என இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கூறி இருந்தார்.

அவர் கூறியது போலவே, பாடல் வெளியான சமயத்தில் இருந்து அஜித் ரசிகர்கள் குட் பேட் அக்லியின் முதல் சிங்கிளை பிரேம் பை பிரேமாக கொண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக யூடியூப்பில் பாடல் வெளியான சமயத்தில் இருந்து பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பாடலை பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

இதன் காரணமாக யூடியூப்பில் ஒஜி சம்பவம் பாடல் சுமார் 20 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. அத்துடன் பாடல் வெளியாகி 3 நாட்கள் ஆன பின்னும் யூ...