இந்தியா, ஏப்ரல் 9 -- Good Bad Ugly Movie Update: நடிகர் அஜித்- திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'குட் பேட் அக்லி' திரைப்படம் நாளை ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தின் புக்கிங் கடந்த ஏப்ரல் 4ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் வழக்கம் போல காலை 9 மணிக்கான சிறப்புக்காட்சி ஓப்பன் செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும் படிக்க: என் பையனுக்கு ஒன்னுன்னா விட்டத தொட்டு தான ஆகணும்.. அதிரும் குட் பேட் அக்லி ட்ரெயிலர்..

வழக்கமாக, விஜய், அஜித் திரைப்படங்கள் எல்லாம் ரிலீஸ் ஆனாலே, குறைந்தபட்சம் முதல் 3 நாட்களுக்கு தியேட்டர்களில் டிக்கெட் கிடைப்பது அத்தனை பெரிய விஷயமாக இருக்கும். ஆனால், தற்போது, நாளை படமே வெளியாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் இன்னும் குட் பேட் அக்லி படத்திற்கான டிக்கெட்டுகள் முழுவதுமாக விற்பனை ஆகாமல் இருப்பதாக தெரிகிற...