இந்தியா, ஏப்ரல் 10 -- Good Bad Ugly: நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய திரைப்படமான குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகிறது. இதற்கான சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு வெளியானது. இந்த திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியைக் காண அஜித் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்டுகளை வாங்கி வந்தனர். இதில் பலரும் டிக்கெட் கிடைக்காமல் தவித்தனர்.

நிலைமை இப்படி இருக்க, ஈரோட்டை சேர்ந்த ஒரு திரையரங்கம் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பெண்களுக்காக மட்டுமே திரையிட்டுள்ளது . இது அஜித் ரசிகர்கள் மற்றும் ரசிகைகளின் மத்தியில் பெரும் வரவேற்பையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.

அஜித் ரசிகைகளுக்காகவே பிரத்யேகமாக டிக்கெட் புக்கிங் செய்து அவர்களுக்காகவே சிறப்பு காட்சிகளை திரையிட்டுள...