இந்தியா, டிசம்பர் 8 -- விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள கட்டா குஸ்தி திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. செல்லா அய்யாவு இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் கட்டா குஸ்தி பட வெற்றியை படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து கொண்டாடினர்.

அதில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, செல்லா அய்யாவு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய விஷ்ணு விஷால், "எனக்கு வியாபாரம் இல்லை என்று ஒன்பது திரைப்படங்கள் கைநழுவி சென்றன. ஆனால் இன்று கட்டா குஸ்தி திரைப்படம் இதுவரை மட்டும் அனைத்து வகையான வியாபாரத்தில் 30 கோடி ரூபாய் கடந்துள்ளது.

இதற்கு இன்னும் வியாபாரம் உள்ளது. இதனால் தற்போது ஒன்பது திரைப்படங்கள் கையில் உள்ளன. இது மகிழ்ச்சியாக உள்ளது. எப்ஐஆர் படத்திற்கு பிறகு இது என்னுடைய இரண்டாம் வெற்றி

விஷ...