இந்தியா, மார்ச் 11 -- G.V. Prakash: இன்றைய காலகட்டத்தில் ஒரு வயது குழந்தை தொடங்கி பருவம் வந்தவர்கள் வரை அனைவரையும் தன் இசையால் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார்.

17 வயதில் தமிழ் சினிமாவிற்குள் இசையமைப்பாளராக களம் இறங்கிய இவர், இன்று 100 படங்களுக்கு இசையமைத்துள்ளார், 25 படங்களில் நடித்துள்ளார் என தன் சாதனைகளை அடுக்கிக் கொண்டே செல்கிறார். இவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு பிரத்தியேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், தனது இசை தொழில், உத்வேகம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அமரன், தங்கலான், லக்கி பஸ்கார் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் போன்ற படங்களின் ஆல்பங்கள் சமீபத்தில் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த வெற்றி அவருக்கு எந்த மாதிரியான உணர்வை கொடுக்கிறது எனப் பேசியுள்ளார். "இருபது ஆண்டுகளாக ச...