இந்தியா, பிப்ரவரி 15 -- Fire Movie Review: தமிழ்நாட்டில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதுகுறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில் எடுத்த படம் தான் ஃபயர் என திரைப்படத்தின் இயக்குநர் ஜே எஸ் கேவும் படத்தின் நடிகர்களும் கூறி வந்தனர்.

இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியான ஃபயர் படத்தை பார்த்த மக்கள் படம் குறித்து எக்ஸ் தளத்தில் தெரிவித்த கருத்துகள் குறித்து இந்த செய்தியில் காணலாம்.

ஃபயர் படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு எக்ஸ் தள பக்கத்தில் கருத்து தெரிவித்த ஒருவர் பணம் பத்தும் செய்யும் என கருத்து தெரிவித்தார். அத்துடன் நான் சமீபத்தில் பார்த்த படங்களிலேயே மிகவும் மோசமான படம் இது எனக் கூறியுள்ளார்.

மற்றொரு எக்ஸ் தள பயனாளி கூறுகையில், இந்தப் படத்தை வெறு...