இந்தியா, பிப்ரவரி 18 -- Ethirneechal Thodargirathu: தர்ஷன் தன் அப்பா ஆதி குணசேகரனை ஜெயலில் இருந்து வெளியில் கொண்டு வருவதற்காக அறிவுக்கரசியின் மகள் அன்புவை கல்யாணம் செய்ய சம்மதம் தெரிவித்தான்.

இதற்காக இத்தனை நாள் தேடித் தேடி போய் காதலித்த பார்கவியை விட்டு விலகினான். அவளது போனையும், அவள் தரப்பு நியாயத்தையும் முற்றிலும் நிராகரித்தான். இதனால், பார்கவி தர்ஷனின் வீட்டிற்கே வந்து நியாயம் கேட்டாள்.

அதே சமயம், இதுபற்றி எந்த கவலையும் படாமல், தர்ஷன் அறிவுக்கரசி வீட்டிற்கு பெண் பார்க்க சென்றான். அந்த சமயத்தில் பார்கவி போன் செய்தார். இவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் ஈஸ்வரி இதைப்பற்றி கேட்டு பிரச்சனை பெரிதான நிலையில், தர்ஷனை காதலித்த பெண்ணின் வீட்டிற்கு அடியாட்களை அனுப்பினாள் அறிவுக்கரசி.

இது ஏதும் அறியாத ஈஸ்வரியும் ஜனனியும் பார்கவியை பார்ப்பதற்காக அவரத...