இந்தியா, பிப்ரவரி 13 -- Ethirneechal Serial: ஆதி குணசேகரன் வீட்டிற்கு வாழ வந்தவர்களின் சொத்தை எல்லாம் அபகரித்து, பெண்களை வீட்டின் அடுப்படியிலே வைத்திருந்து வந்தார். இவரின் இந்த எண்ணத்தை மாற்றி, வீட்டில் உள்ள பெண்களின் வாழ்க்கையில் வெளிச்சம் காட்ட நினத்தாள் ஜனனி. இதனால் வீட்டிற்குள் ஏகப்பட்ட குழப்பங்கள்.

இதற்கிடையில், தற்போது ஈஸ்வரி ஆதி குணசேகரன் மீது கொடுத்த புகாரின் காரணமாக அவர் ஜெயிலில் உள்ளார். அந்த சமயத்தில், வீட்டில் குழப்பத்தை ஏற்படுத்த தன் சொத்துகளை எல்லாம் கதிரின் பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுத்தார் குணசேகரன்.

இதையடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக ஆதி குணசேகரனாகவே மாறி வரும் கதிர், வீட்டில் உள்ள பெண்களை எல்லாம் தன் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என மிரட்டியும் அதட்டியும் வருகிறான்.

இந்நிலையில் தான், தன் சொந்தக் காலில் நின்று மேல...