இந்தியா, பிப்ரவரி 17 -- Ethirneechal: ஆதி குணசேகரனை பரோலில் எடுக்க அவரது தம்பிகளும் அம்மாவும் தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இதற்காக அவரது தம்பிகள் எல்லாம் குணசேகரனின் மகன் தர்ஷனை அறிவுக்கரசியின் மகளுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டனர். அத்துடன் நில்லாமல் குடும்ப சொத்துகளையும் காட்டி தர்ஷனின் ஆசையை தூண்டினர்.

இதனால், சித்தப்பாக்கள் சொன்னது போலவே, தர்ஷன் அறிவுக்கரசியின் மகளை பெண்பார்க்க சென்றார். அந்த சமயத்தில் தான், தர்ஷன் காதலித்து வந்த பார்கவி என்ற பெண் தர்ஷனின் வீட்டிற்கு வந்து அவரது அம்மா மற்றும் சித்திக்களிடம் தர்ஷன் காதலித்து ஏமாற்றியதை கூறி அழுதுள்ளார்.

அப்போது, தர்ஷன் தனக்கு அனுப்பிய மெசேஜ்கள், ஆடியோக்களை எல்லாம் குடும்பத்தினர் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் படிக்க: வேதவள்ளியால் வேதனையில் தவிக்கும் கயல் கு...