இந்தியா, பிப்ரவரி 25 -- Dragon Movie Box Office: ஓ மை கடவுளே எனும் வெற்றிப் படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து, கோமாளி, லவ் டுடே படத்தின் மூலம் இளைஞர்களைக் கவர்ந்த பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கிய படம் டிராகன், கல்லூரி காலத்தில் ஜாலியாக அரியர் வைத்து சுற்றித் திரியும் ஒருவன் வாழ்க்கையில் முன்னேறுவது பற்றி பேசும் கதை தான் டிராகன்.

இந்தப் படத்தில் பிரதீப்பிற்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் நடித்துள்ளனர். அவர்களுடன் விஜே சித்து, ஹர்ஷத் கான் போன்றோரும் நடித்துள்ளனர்.ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் 4 ஆம் நாள் வசூல் விவரங்கள் குறித்து திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை வெளியிடும் சாக்னில்க் வெளியிட்டுள்ளது. அதன்படி, டிராகன் திரைப்படம் தமிழ்நாடு அளவில் 4 ஆம் நாள...