இந்தியா, பிப்ரவரி 2 -- ஈழப்போராட்டத்தின் போது தீக்குளித்து முத்துக்குமார் இறந்தபோது, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மாயாண்டி குடும்பத்தார் பட ஷூட்டிங்கில் இருந்ததாக திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

நான் சொத்து சேர்த்துவிட்டதாக சில அவதூறுகளை பார்த்தேன். சொத்து சேர்ப்பது என்பது எல்லோருக்குமான உரிமை, வாய்ப்பு, வசதி இருந்தால் நேர்மையாக சொத்து சேர்த்துக் கொள்ளலாம். வருமானவரி கட்டிக் கொள்ளலாம். அடுத்தவனிடம் திரள்நிதி வாங்கி அதை தன் குடும்பத்தையும், வயிற்றையும் வளர்ப்பவன் ராஜீவ் காந்தி இல்லை. சைமன் செபாஸ்டியனாக இருந்து செந்தமிழனாக சீமான் மாறினாரே அவரிடம் இதை கேட்டு இருக்க வேண்டும்.

சைமன் செபாஸ்டியன் என்ற பெயரை செந்தமிழன் என்று மாற்றினால் நன்றாக இருக்கும் என்று என்னிடம் சீமான் கேட்டார். அதை கெஜட்டில் மாற்றிக்...