இந்தியா, மார்ச் 2 -- Director Sandeep Reddy Vanga: தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, தான் இயக்கிய படங்கள் மூலம் பான் இந்தியா ரேஞ்சில் ஸ்டார் இயக்குனராக மாறியுள்ளார். அவர் தனது முதல் படமான அர்ஜுன் ரெட்டி (2017) மூலம் அவர், இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.

அந்த படத்தின் மூலம் சந்தீப் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தார். அதே படம் பாலிவுட்டில் கபீர் சிங் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. 2023 ஆம் ஆண்டில், சந்தீப் அனிமல் படம் மூலம் பாக்ஸ் ஆபிஸின் உச்சத்திற்கு சென்றார். இந்த படங்களின் மூலம் நாட்டின் தலைசிறந்த இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.

இந்நிலையில், இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா சமீபத்தில் பங்கேற்ற பேட்டி ஒன்றில் அவரது வாழ்க்கையையே மாற்றிய படமான அர்ஜூன் ரெட்டி குறித்து மனம் திறந்து பேசுகிறார். மேலும் ...