இந்தியா, ஏப்ரல் 15 -- Director S.S. Stanley: தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ். ஸ்டான்லி சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு வயது 58. இவர் தமிழ் சினிமாவின் 2000 ஆண்டு காலகட்டத்தில், மிகவும் பிரபலமான இயக்குநராக இருந்தார். இவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை (பிப்ரவரி 15) சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க| இதெல்லாம் நடக்கவே கூடாது.. சினிமாவ காப்பாத்தணும்.. ஆதங்கத்தில் குமுறும் பேரரசு..

இயக்குநர்கள் மகேந்திரன் மற்றும் சசியிடம் பயிற்சி பெற்ற எஸ்.எஸ். ஸ்டான்லி, 12 ஆண்டு உதவி இயக்குநராக பணியாற்றிய பின் 2002 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் எனும் தன் முதல் படத்தை இயக்கி வெளியிட்டார். ஸ்ரீகாந்த் மற்றும் சினேகா நடித்த இந்தப் படம் இளைஞர்களை வெகுவாகவே கவர்ந...