இந்தியா, பிப்ரவரி 12 -- Dhanush: கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரையுலகிலும் அனைத்து வயதினராலும் கொண்டாடப்படுபவர் நடிகர் தனுஷ். இவர் திரையுலகில் தன் அனுபவம் கூட கூட தன்னை நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையாளரான அடையாளப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், அவரது இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'. இத்திரைப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

இந்தப் படத்தின் டிரெயிலர் கடந்த 10ம் தேதி வெளியான நிலையில், நேற்று 11ம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர...