இந்தியா, மார்ச் 29 -- CSKVsRCB: ஐபிஎல் 2025: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றைய தினம் சென்னை - ஆர்.சி.பி அணிகள் மோதின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் ஆர்.சி.பி அணி வெற்றி பெற்றது. இதனை ஆர்.சி.பி அணி வீரர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்தப்போட்டியில் அஜித் மனைவியும், நடிகையுமான ஷாலினி தன்னுடைய மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக்குடன் பங்கேற்றார்.

போட்டியின் நடுவே அஜித்தின் 'ஆலுமா டோலுமா' பாடல் ஒலிப்பரப்பட்டது. இதற்கு அனோஷ்கா மகளும், அவர் உடன் வந்திருந்த இன்னொரு பெண்மணியும் வைஃப் செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதே போல ஷிவம் துபே - ரச்சின் ரவீந்திடா ஆகியோரின் விக்கெட்டுகளை பெங்களூர் பவுலர் யாஷ் தயாள் வீழ்த்திய போதும் ஷாலினி அதிர்ச்சியானார். அப்போது அவர் கொடுத்த ரியாக்‌ஷனு...