இந்தியா, மார்ச் 14 -- Coolie Movie Update: வேட்டையன் படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் கூலி. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகர்கள் சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, அமீர் கான், சவுபின் சாஹிர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

கூலி படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கூலி படம் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளதாக கூறினார். இவரது இந்த அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

மேலும் படிக்க: கூலி படத்தில் இணைந்த புட்ட பொம்மா.. கொண்டாட்டத்தில் வைப் ஆன நெட்டி...