இந்தியா, மார்ச் 15 -- Coolie Movie Update: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் கூலி திரைப்படம் மீதான ஆர்வம் மக்களிடம் நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது. தொடர்ந்து வரும் படத்தின் அப்டேட்டுகளால் ரஜினி காந்த்தின் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இந்த நிலையில், கூலி படம் குறித்த மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க: நெட்டிசன்களிடையே வைரலாகும் கூலி படம்.. அப்டேட் மேல் அப்டேட்டால் குஷியான ரசிகர்கள்

தமிழில் ஆக்‌ஷன் படங்களை கொடுத்து வெற்றி பெற்று வரும் லோகேஷ் கனகராஜ் ரஜினியுடன் இணைந்து கூலி படத்தை இயக்குவதால் எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளன. அத்துடன் இந்தப் படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் என பல மொழி திரைக் கலைஞர்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றர். இவ்வளவு பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவரும் கூலி படத்தின் ஓடிடி ஒப...