இந்தியா, பிப்ரவரி 14 -- சாவா விமர்சனம்: 'சாவா' திரைப்படத்தில், சத்ரபதி சம்பாஜி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்கி கெளஷல் வெளிப்படுத்தி இருக்கும் நடிப்பு அவர் அந்த கதாபாத்திரத்திற்காக, எவ்வளவு மெனக்கெடல் செய்து இருக்கிறார் என்பதை உணர முடிகிறது. படத்தின் உச்சபட்ச எமோஷனை அடைவதற்கான நகர்வு சரியான பாதையில் இல்லை. அது அது நம் பொறுமையை சோதிக்கிறது.

லக்ஷ்மன் உடேகர் இயக்கத்தில், விக்கி கெளஷல், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து, இன்று வெளியான திரைப்படம் 'சாவா'. மராட்டிய சாம்ராஜ்யத்தின் இரண்டாவது சத்ரபதியான சம்பாஜி மகாராஜை மையப்படுத்தி இந்தப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.

முகாலய பேரரசர் ஒளரங்கசீப் (அக்‌ஷய் கண்ணா) தன்னுடைய எல்லையை விரிவுபடுத்த விரும்புகிறார். அதனை தடுத்து பின்வாங்க வைக்கிறார் சம்பாஜி மகாராஜா (விக்கி கெளஷல்). இ...