இந்தியா, பிப்ரவரி 22 -- Box Office Collection: தமிழ் சினிமாவில் நேற்று பிப்ரவரி 21ம் தேதி நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், டிராகன் என இரண்டு முக்கியமான படங்கள் ரிலீஸ் ஆனது. இந்தப் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு இருந்த நிலையில், முதல் நாளான நேற்று இந்த இரண்டு படங்களும் எவ்வளவு வசூலித்துள்ளன என்பதை பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷிற்கு என தனியாக பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவர் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் பலராலும் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், தனுஷ் இளம் தலைமுறை நடிகர்களை வைத்தும், அவர்களது காதல், காதல் தோல்வி குறித்தும் பேசும் வகையில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ், அனிகா, பிரியா வாரியர் என ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றன. காதலு...