இந்தியா, ஜனவரி 28 -- basavaraj bommai: பசவராஜ் பொம்மை. இவர் கர்நாடக மாநிலத்தின் 23வது முதலமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்டவர், இவர், இந்த பொறுப்புக்கு வரும் முன் இருந்த வாழ்க்கை குறித்தும் அரசியல் நகர்வுகள் குறித்தும் இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர்களுள் ஒருவராக இருந்தவர் எஸ்.ஆர். பொம்மை. அவரது மகன் தான் இவர். தந்தையின் ஜக்கிய ஜனதா தளத்தில் கட்சிப் பொறுப்புகளை ஏற்று திறம்பட செயலாற்றி வந்த பசவராஜ் பொம்மை அங்கிருந்து விலகி 2008ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

இவர், கர்நாடக மாநில முன்னாள் முதலர்வரின் மகன் என்பதாலும், மாநிலத்தில் பெரும் வாக்கு வங்கி வைத்திருக்கும் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் பாஜகவில் பசவராஜ் பொம்மைக்கு கட்சியில் மதிப்பும் மரியாதையும் கிடைத்தது.

பின் அவர் 2008ம் ஆண்டே க...