இந்தியா, பிப்ரவரி 7 -- Amaran: தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் அமரன். இது ஒரு மாதத்தை கடந்து தியேட்டரில் வசூல் சாதனை புரிந்து வந்த நிலையில், ஓடிடியிலும் மக்கள் மனதை கவர்ந்தது.

இந்நிலையில், அமரன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 100 நாட்களைக் கடந்துள்ளது. இதையடுத்து, அமரன் படக்குழுவினர், ரசிகர்களுக்கும், மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

அமரன் படம் 100வது நாளை இன்று கடக்கும் நிலையில், படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தனது எக்ஸ் தள பக்கத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில், "#100வது அமரன் தினத்தில் இதை எழுத விரும்பினேன்

அன்புள்ள இந்து ரெபேக்கா வர்கீஸ் மேட...