இந்தியா, ஜூன் 3 -- தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மூத்த மகன், இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் அண்ணன். இதைக் கடந்து தனக்கான அடையாளத்திற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பவர் நடிகர் ஏ.எல்.உதயா. தன்னுடைய திரையுல பயணமும், அதில் அவர் சந்தித்த தோல்விகள் குறித்தும் அவர் யூடியூப் ஒன்றுக்கு அவர் அளித்த சுவாரஸ்யமான பேட்டி இதோ:

''ஜூலையில் அம்மா இறந்தார். ஓராண்டு ஆகப்போகிறது. எப்படி இத்தனை நாட்கள் போனது என்றே தெரியவில்லை. என் மீதும், தம்பி, தங்கை மீது ரொம்ப பாசமா இருந்தாங்க. உடல்நிலை சரியில்லாமல் இருந்தாங்க, காப்பாற்றி விடலாம் என்று நினைத்தோம். கொஞ்சம் கொஞ்சமாக அவர் எங்களிடமிருந்து பிரிந்தார்.

பெற்றோர் இல்லாத போது கொண்டாடுவதை விட, அவர்கள் இருக்கும் போது கொண்டாட வேண்டும். நான் பல தோல்விகளை சந்தித்த போது, நீ கட்டாயம் ஜெயிப்ப என்று அம்மா தா...