இந்தியா, ஏப்ரல் 12 -- Ajith Vs Vijay: அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த குட் பேட் அக்லி படம் தியேட்டரில் வெளியானதைத் தொடர்ந்து அவர்கள் படத்தை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், கொண்டாட்டத்திற்கு நடுவே ஒரு கலவரம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

பிரபல திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் இந்த விஷயத்தை தனது எக்ஸ் தளப் பதிவில் பகிர்ந்து, விஷயத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். அவருடைய பதிவில், "GoodBad Ugly ஓடிய தியேட்டரில் TVK, TVK என கத்திய விஜய் ரசிகர்களுக்கு தர்ம அடி. சமீபகாலமாக பொது இடங்களில் இப்படி கத்தி வருகிறார்கள். இனி அடிக்கடி தர்ம‌ அடி வாங்கப்போவது உறுதி." எனக் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த சமயத்தில் இருந்தே அவரை ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்து வந்த வண்ணம் இரு...