இந்தியா, பிப்ரவரி 23 -- Ajith Kumar: நடிகர் அஜித் கார் மற்றும் பைக் ரோஸ் மீது கொண்ட ஆர்வத்தால் பல போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், அவர், ஸ்பெயின் நாட்டின் வேலன்சியாவில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் பங்கேற்றார். அப்போது, அவர் 5 சுற்றுகளை முடித்து ஆறாம் சுற்றில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்த தகவலையும், வீடியோவையும் நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளார்.

அவர் வெளியிட்ட தகவலின் படி, "ஸ்பெயின் நாட்டின் வேலன்சியாவில் நடைபெற்ற கார் பந்தத்தில் நடிகர் அஜித் குமாருக்கு 5வது சுற்று நன்றாக இருந்தது. இந்த சுற்றில் அவர் 14வது இடத்தைப் பிடித்து, அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

ஆனால், 6வது சுற்று துரதிர்ஷ்டவசமானது. மற்ற கார்கள் ம...