இந்தியா, பிப்ரவரி 7 -- Ajith Kumar: அவள் பெயர் தமிழரசி படத்தில் நடித்து பிரபலமானவர் மனோ சித்ரா. இவர் தமிழ் சினிமாவிற்குள் வந்து 15 வருடங்கள் கடந்த நிலையில், தற்போது சினிமாவில் இருந்து விலகி ஆன்மீகத்தில் நாட்டத்தை செலுத்தி வருகிறார்.

இவரின் இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன, சினிமா வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நிகழ்வுகள் உள்ளிட்டவை குறித்து அவர் ஆதன் சினிமா யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அந்தப் பேட்டியில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களையும் கூறியுள்ளார். அந்தப் பேட்டியில், " நான் சினிமாவிற்கு வந்ததே ஒரு ஆக்டிடென்ட் தான். நான் காஞ்சிபுரம் பொன்னு. அப்பப்போ காமாட்சி அம்மன் கோவிலுக்கு போற பழக்கம் இருக்கு. அந்த சமயத்துல தான் வெண்ணிலா கபடிக் குழு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பட வாய்ப்பு வந்த போது நான் 9வது தான் படித்துக் க...