இந்தியா, மார்ச் 24 -- Actress Sona: நடிகை சோனா தமிழ் சினிமாவில் சுமார் 25 வருடங்களுக்கும் மேலாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த நிலையில், தற்போது ல்மோக் எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் அவரது வாழ்க்கையை பற்றியதாக இருக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், படம் ஆரம்பிக்கும் போதே பல பிரச்சனைகளை சந்தித்து வருவதாக பேசி வந்த அவர், இன்று திடீரென பெப்சி அமைப்பின் கட்டிடத்தின் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய படத்தின் ஹார்ட் டிஸ்க், தன்னை ஏமாற்றி பறித்த சுமார் 8 லட்ச ரூபாயை கொடுக்கும் வரை இதே இடத்தில் தான் இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சோனா, "இதை எல்லாம் நான் தர்ணான்னே சொல்ல மாட்டேன். எனக்கு என்னோட வேலை நடக்க மாட்டிங்குது. ...