இந்தியா, மார்ச் 8 -- Actress Sona: தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமாரின் பூவெல்லாம் உன் வாசம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சோனா. இவர், பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து புகழ் பெற்றவர். சமீப காலங்களில் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த சோனா, தற்போது தனது வாழ்க்கை வரலாற்றை பொது வெளிக்கு கொண்டு வரும் நோக்கில் வெப் சீரஸ் ஒன்றை இயக்கி உள்ளார்.

ஸ்மோக் என பெயரிடப்பட்ட அந்த வெப் சீரிஸ் 8 எபிசோடுகளாக உருவாகியுள்ளது. இதில் சோனாவின் 5 வயது முதல் தற்போது வரை நடந்த சம்பவங்கள் தொகுத்து காட்சிகளாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வெப் சீரிஸில் 4 வகையான சோனா இடம் பெறுவார் என நடிகை சோனா கூறியுள்ளார்.

இதுகுறித்து நடிகை சோனா பிஹைண்ட்வுட்ஸ் டிவி யூடியூபிற்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், ஸ்மோக் வெப் சீரிஸ் மட்டுமல்லாது தனது தனிப்பட்...