இந்தியா, மார்ச் 26 -- Actress Shraddha Kapoor: பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவ்வாக உள்ளவர். அடிக்கடி தனது வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் பற்றி ரசிகர்களுக்குத் தெரிவித்து வருவார். அப்படி இருக்கையில், எக்ஸ் தளத்தில் (முன்னாள் ட்விட்டர்) அவர் சமீபத்தில் வெளியிட்ட பதிவு ரசிகர்களை அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்ற கவலையில் ஆழ்த்தியுள்ளது.

மார்ச் 25 அன்று, ஷ்ரத்தா எக்ஸ் தளத்தில், "Easy $28. GG!" என்று பதிவிட்டிருந்தார். இதன் அர்த்தம் என்னவென்று ரசிகர்கள் குழப்பமடைந்தனர். சிலர் அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்று கவலைப்பட்டனர். மற்றவர்கள் ஏஐ குரோக்கைப் பயன்படுத்தி அவரது ட்வீட்டின் சூழலைப் புரிந்துகொள்ள முயன்றதாக கூறினர்.

இருப்பினும் ஷ்ரத்தா கபூரின் ரசிகர்கள் எக்ஸ் தளத்தில், "மீண்டும் ஹேக்...